விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி

விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அரசியல் கட்சியாக மாறும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி
எஸ்.ஏ.சந்திரசேகர் | விஜய்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் ஒன்றிணைந்து தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஏராளமான ரசிகர்களைக் கொண்டிருக்கும் விஜய் அவரது திரைப்படங்களிலும், இசை வெளியீட்டு விழா மேடைகளிலும் அவ்வப்போது அரசியல் கருத்துகளை உதிர்ப்பார். அவரின் கருத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே பெரும் வரவேற்பு உண்டு. கடைசியாக ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தியதை அடுத்து அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாமல் தவிர்த்தார் விஜய்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதை முற்றிலுமாக மறுத்தார் இயக்குநர் எஸ்.ஏ.சி. இந்நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறி அதிரடி காட்டியிருக்கிறார்.


மேலும் படிக்க: பிரபல நடிகருக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து..

விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் விருப்பப்படும் போது மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் வருவோம்.


நாங்கள் வந்து மக்களைக் கூப்பிடுவதை விட மக்கள் எங்களைக் கூப்பிடும் போது இன்னும் பவர் ஃபுல்லாக இருக்கும் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.
First published: October 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading