Home /News /entertainment /

#MasterUpdate | தீபாவளி அன்று வெளியாகிறதா மாஸ்டர் டீசர் ? அப்டேட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

#MasterUpdate | தீபாவளி அன்று வெளியாகிறதா மாஸ்டர் டீசர் ? அப்டேட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர்

மாஸ்டர்

நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வெளிவரவுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தயாரிப்பில் தெரிவிக்கப்பட்டது. Today 100% master என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். அதன்படி தற்போது டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    நடிகர் விஜய் நடிப்பில் திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ம் தேதி வெளியிடப்படும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்டர்’.அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதம் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

    தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திரையரங்கில் படத்தை வெளியிடுவதில் உறுதியாக இருந்தது படக்குழு. இந்நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்திருப்பதால் ‘மாஸ்டர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்று தயாரிப்பாளர் லலித்குமார் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

     



     

    இந்நிலையில் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டால் மட்டுமே டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட முடியும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

     



     

     



     

     



     

     



     

     



     

    இதனிடையே லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என வெளியிட்ட வீடியோவை கண்டு விஜய் ரசிகர்கள் #MasterUpdate எனும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

     

     



     

    இதனைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தின் டீசர் நவம்பர் 14 ம் தேதி வெளியிடப்படும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Acor Vijay, Master

    அடுத்த செய்தி