Home /News /entertainment /

'பீஸ்ட்' கடைசி நாள் ஷூட்டிங்... நெல்சனை கட்டிப்பிடித்து குட் பை சொன்ன விஜய்..

'பீஸ்ட்' கடைசி நாள் ஷூட்டிங்... நெல்சனை கட்டிப்பிடித்து குட் பை சொன்ன விஜய்..

விஜய்

விஜய்

Last Day Shooting For Beast : பீஸ்ட் படத்திற்கான விஜய்யின் படப்பிடிப்பும் நிறைவு..

    தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் நடிகர் விஜய் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே ஹிட் என்று கூறலாம்.

    மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக விஜய் அறிவித்தார்.இயக்குனர் நெல்சன் இயக்கிய முதல் படமான கோலாமாவு கோகிலா ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத அளவுக்கு வெற்றிப்பெற்றது. அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் மிகப்பெரிய ஹிட் என்று கூறலாம்.அந்த வகையில் நெல்சனின் மூன்றாவது படமான பீஸ்ட் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் படத்தில் இருப்பதால் காமெடிக்கு எந்த ஒரு பஞ்சமும் இருக்காது.நேற்று படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டேவின் பீஸ்ட் படத்திற்கான ஷூட்டிங் முடிந்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.



     




    View this post on Instagram





     

    A post shared by Sun Pictures (@sunpictures)





    இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கான விஜய்யின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு ஒரு புகைப்படத்தோடு அறிவித்துள்ளனர்.அந்த புகைப்படத்தில் இயக்குனர் நெல்சனை விஜய் கட்டிப்பிடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sun Pictures (@sunpictures)





    இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி