‘தளபதி விஜய் கூல்’ - பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ரிப்ளை

விஜய் -ஷாருக்கான்

ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் நேற்று 15 நிமிடங்கள் வரை சேட் செய்தார்.

 • Share this:
  பாலிவுட்டின் பாஷா ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் #Asksrk என்ற ஹேஷ்டேக் வாயிலாக நேற்று உரையாடினார். ஷாருக்கானின் ரசிகர்கள் இந்த உரையாடலின் போது அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அடுத்த படத்தின் அறிவிப்பு, ஃபிட்னஸ், 2020 எப்படி இருந்தது என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார். சுமார் 15 நிமிடங்கள் தனது ரசிகர்களுக்காக ஷாருக் ட்விட்டரில் நேற்று நேரத்தை செலவிட்டார்.

  ரசிகர்களின் சில கேள்விகள்

  கேள்வி: இந்த லாக்டவுன் நேரத்தில் என்னை பிஸியாக வைத்திருக்க சில புத்தகங்களை பரிந்துரையுங்கள்?

  பதில்: ஹாரி பார்டர் சீரிஸை மீண்டும் படிக்கத் தொடங்குங்கள்
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேள்வி: ''2020 உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது?''

  பதில்: ''வேலை செய்த நேரம் மிகவும் குறைவு. ஆனால், குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது.''

     அப்போது விஜய் ரசிகர் ஒருவர் சமீபத்தில் வெளியான தளபதி விஜய்-யின் பீஸ்ட் படத்தின் செகெண்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து ‘தளபதி விஜய் குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்றார். அதற்கு ‘வெரி கூல்’என ஷாருக்கான பதிலளித்துள்ளார். விஜய் ரசிகரின் இந்த கேள்வி - பதில் ட்விட்டரில் வைரலாகி உள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: