• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’தளபதி 66’ படத்துக்காக தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் விஜய்?

’தளபதி 66’ படத்துக்காக தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் விஜய்?

விஜய்

விஜய்

இரு மொழிகளில் உருவாகும் தளபதி 66 படத்தின் ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்திட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
    அடுத்தப் படத்திற்காக விஜய் வாங்கும் சம்பளம் குறித்த செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

    'மகரிஷி' இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி நடிகர் விஜய்யுடன் 'தளபதி 66' படத்தில் இணைந்து நடிப்பதாக கடந்த இரண்டு மாதங்களாக தகவல்கள் வலம் வருகின்றன. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாடகர் கிரிஷ், பின்னர் அதனை நீக்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் விஜய் தனது அடுத்தப்படமான 'தளபதி 66' படத்திற்காக வம்சி பைடிப்பள்ளியுடன் இணைவதாகவும், இதனை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் தெலுங்கு ஊடகங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் தளபதி 66 படத்தின் ஒப்பந்தத்தில் விஜய் கையெழுத்திட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியாகியுள்ள தகவல்களின் படி இந்தப் படத்தில் 120 கோடி விஜய் சம்பளம் பெறுகிறாராம். இது உண்மையாகும் பட்சத்தில் தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார். அதோடு விஜய் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாவார்.

    தவிர இதற்கடுத்து விஜய், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே நெல்சன் திலீப் குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: