Shoes of the Dead நாவலை விஜய்யை வைத்து படமாக்கும் வெற்றிமாறன்...?

வெற்றிமாறன் மற்றும் விஜய்

வெக்கை நாவலையே அசுரன் என்ற கமர்ஷியல் படமாக எடுத்தவர் வெற்றிமாறன். நீலிமாவின் நாவலை விஜய்யை போன்ற மாஸ் ஹீரோவுக்காக மாற்றுவது பெரிய விஷயமில்லை. நாவலின் கதையை கேட்ட விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இப்போதைக்கு கேள்விக்குறியாகத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. கோட்டா நீலிமா எழுதிய ஷுஸ் ஆஃப் தி டெட் நாவலின் உரிமையை வெற்றிமாறன் வாங்கியுள்ளார். விஜய்யை வைத்து இதனை படமாக்க  அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லாக்கப், வெக்கை நாவல்களை படமாக்கிய வெற்றிமாறன், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை அதே பெயரில் சூர்யாவை வைத்து படமாக்குகிறார். தற்போது அவர் இயக்கிவரும் விடுதலை படமும் ஜெயமோகனின் சிறுகதையை தழுவியே எடுக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசியல் விமர்சகரும், எழுத்தாளருமான கோட்டா நீலிமாஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். பொலிடிகல் சயன்ஸில் பிஹெச்டி முடித்தவர். ஜேஎன்யூ, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி முதலிய கல்வி நிறுவனங்களில் பயின்றவர். இவர் எழுதி 2013 இல் வெளிவந்த நாவல், ஷுஸ் ஆஃப் தி டெட். கடன் தொல்லையால் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். அவரது விதவை மனைவி நஷ்டஈடு கேட்டு போராடுகிறார். அரசியல் சக்திகள் தொடர்ந்து அவரது கோரிக்கையை நிராகரிக்கின்றன.

Also read... திரையரங்குகளில் வெளியாக இருக்கும் தமிழ்ப் படங்கள்...!

இறந்து போன விவசாயியின் தம்பி எப்படி சட்டப் போராட்டத்தின் மூலம் நீதி பெற்று தருகிறார் என்பது கதை. ஒரு எளிய விவசாயியின் போராட்டம் அதிகாரமிக்க ஒரு அரசியல்வாதியை எப்படி அம்பலப்படுத்துகிறது என்பது நாவலில் பிரதானமாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நாவலை படமாக்கும் உரிமையை வெற்றிமாறன் வாங்கியுள்ளார். வெக்கை நாவலையே அசுரன் என்ற கமர்ஷியல் படமாக எடுத்தவர் வெற்றிமாறன். நீலிமாவின் நாவலை விஜய்யை போன்ற மாஸ் ஹீரோவுக்காக மாற்றுவது பெரிய விஷயமில்லை. நாவலின் கதையை கேட்ட விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறதுமிக விரைவில் நீலிமாவின் நாவலின் ஹீரோ யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: