புதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ

news18
Updated: September 21, 2019, 7:48 AM IST
புதிய கெட்டப்பில் விஜய்... வைரலாகும் வீடியோ
விஜய்
news18
Updated: September 21, 2019, 7:48 AM IST
சமூக வலைதளங்களி விஜய்யின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகும் இந்தப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று முந்தினம் சென்னையில் நடைபெற்றது, விழாவில் சுபஸ்ரீ, பேனர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசியது சமூக வலதளங்களில் பேசு பொருளானது. விஜய்யின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.

தீபாவளிக்கு பிகில் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையும் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார், லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் தயாராகி வருகிறார். பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தாடியுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் ‘தளபதி 64’ படத்தின் கெட்டப் என வைரலானது,. அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை விஜய்ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Loading...
Also watch

First published: September 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...