ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மனுஷன்யா... ! பாடகி மானசிக்கு மேடையேறி உதவிய விஜய் - வீடியோ பகிர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்

மனுஷன்யா... ! பாடகி மானசிக்கு மேடையேறி உதவிய விஜய் - வீடியோ பகிர்ந்து கொண்டாடும் ரசிகர்கள்

பாடகி மானசி - விஜய்

பாடகி மானசி - விஜய்

மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு மைக் கொடுத்தார். நடிகரின் விஜய்யின் செயலுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் விஜய்யின் வாரிசு பட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. பிரபலங்கள் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துவரும் நிலையில் இடையிடையே வாரிசு பாடல்களும் பாடப்படுகின்றன.

அந்த வகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி. அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு மைக் கொடுத்தார். நடிகரின் விஜய்யின் செயலுக்கு பாராட்டு குவிந்துவருகிறது.

'வாரிசு' கிளைமேக்ஸ்ல விஜய்யோட நடிப்ப பார்த்தா... - சீக்ரெட் சொன்ன பிரகாஷ் ராஜ்!

ரஞ்சிதமே பாடலை விஜய்யுடன் இணைந்து மானசி பாடினார். லிரிக்கல் விடியோவில் மானசியைப் பார்த்தவர்கள் யாருடா இந்த பொண்ணு என ஹார்ட் விட்டனர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் அதிகம் பேர் மானசியை பின்தொடர்ந்தனர்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Actor Thalapathy Vijay, Varisu