கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - கேரள எம்எல்ஏ

விஜய் படங்கள் வெளியாகும் போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு பால் அபிசேஷம் செய்கின்றனர் என்று கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்

news18
Updated: February 11, 2019, 8:10 PM IST
கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - கேரள எம்எல்ஏ
விஜய்
news18
Updated: February 11, 2019, 8:10 PM IST
கேரளாவில் மலையாள நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது போலவே கேரளாவிலும் ரசிகர்கள் பலம் அதிகம். தமிழ்நாட்டில் விஜய் படங்களின் ஓபனிங்-க்கு இணையாக கேரளாவிலும் ஓபனிங் இருக்கும். கட் அவுட், பாலபிஷேகம் என கேரள நடிகர்களின் படங்கள் ரீலீசுக்கு இணையாக விஜய் படங்களின் ரீலீசும் களைகட்டும். கேரளாவில் விஜய்யின் வளர்ச்சியைக் கண்டு கேரள திரைத்துறையினர் பலர் ஆதரித்தும், விமர்சித்தும் தங்களது கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் கைரலி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிறப்பு விருந்துநர்களில் ஒருவர் கேரளாவில் விஜய்க்கு அதிகளவில் வரவேற்பு இருக்கிறது என்று வருத்தத்துடன் விமர்சித்தார்.

அப்போது பேசிய கேரள எம்எல்ஏ பி.சி.ஜார்ஜ், ‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்கள் வெளியாகும் போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு பால் அபிசேஷம் செய்கின்றனர்’ என்று தெரிவித்தார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுAlso watch

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...