அஜித்துக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!

அஜித்துக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்!
அஜித் - விஜய்
  • Share this:
அஜித்துடன் நல்ல நண்பராக நட்பு பாராட்டி வரும் விஜய் அவருக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் ஆகியோர் வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்களும் ஏராளம். உண்மையில் அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டி வரும் நிலையில் அவரது ரசிகர்களோ சமூகவலைத்தளங்களில் ஹேஷ்டேக் போரில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் அஜித்துக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் இதையறிந்த நடிகர் விஜய், அஜித், சிவா இருவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார். இத்தகவலை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விழா மேடை ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.


தனியார் வார இதழ் நடத்திய அந்த விருது விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படமாக விஸ்வாசம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஸ்வாசம் படக்குழுவுக்கு வழங்கினார்.

மேலும் படிக்க: சூர்யாவுடன் இணையும் படம்! டைட்டிலை வெளியிட்ட வெற்றிமாறன்!
First published: January 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்