ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Beast கொண்டாட்டம்.. தியேட்டர் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் அட்டகாசம்

Beast கொண்டாட்டம்.. தியேட்டர் கண்ணாடிகளை உடைத்து ரசிகர்கள் அட்டகாசம்

பீஸ்ட்

பீஸ்ட்

Beast Release : சென்னை ரோகினி திரையரங்கில் விஜயின் Beast திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு உள்ள கண்ணாடிகளை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் அதிகாலை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில்  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரைப்படத்தை பார்க்க குவிந்ததோடு அங்கு ஒலித்த பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.

அதிகாலை காட்சிக்கு திரையரங்கிற்கு முன்பு குவிந்த பல பேரிடம் படத்தை பார்க்க உரிய டிக்கெட் இல்லை என்றாலும் காட்சிக்கான அழைப்பு விடுக்கப்பட்ட உடன் திரையரங்கில் கூட்டம் அத்துமீறி நுழைந்ததால் திரையரங்க பணியாளர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். உரிய டிக்கெட் இல்லை என்றாலும் திரையரங்கில் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் தானாகவே இருக்கைகளில் சென்று அமர என்ன செய்வது என்று தெரியாமல் திரையரங்க உரிமையாளர்கள் விழி பிதுங்கி நிற்க துவங்கினர்.

ஒருகட்டத்தில் உரிய டிக்கெட் உடன் வந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு இடமில்லாமல் தவிக்க பலரும் திரைப்படத்தை திரையரங்கிற்குள் நின்றுகொண்டு பார்க்கும் நிலைக்கு ஆளாகினர். இன்னும் சில ரசிகர்கள் திரையரங்கில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த எல்இடி (LED) திரைகளை உடைத்து ஆர்ப்பரிக்க தொடங்கினர்.

ரோகினி திரையரங்கில் ரசிகர்கள்

அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்கலாம் என்று அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து அதற்கான டிக்கெட் விலை பல மடங்கு ஏற்றிவைக்கும் திரை அரங்குகள் இதுபோன்ற சவால்களையும் எதிர் கொள்ளும் நிலை அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

Must Read : தமிழால் இணைவோம்... ஏ.ஆர்.ரஹ்மான், சிம்புவை தொடர்ந்து தமிழுக்கு ஆதரவாக அனிருத்!

ரோகிணி திரையரங்கில் வலிமை திரைப்படம் வெளியானபோது பெரிய கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படத்திற்கு சில சிறிய கண்ணாடிகளை பறி கொடுத்துள்ளது.

First published:

Tags: Actor Vijay, Beast, Chennai, Vijay fans