பாஜகவுக்கு விஜய் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட ஆதாரம்

news18
Updated: April 16, 2019, 1:23 PM IST
பாஜகவுக்கு விஜய் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட ஆதாரம்
பொன்.ராதாகிருஷ்ணன்
news18
Updated: April 16, 2019, 1:23 PM IST
விஜய் ரசிகர்கள் தங்களுக்கு உற்சாக வரவேற்பளித்ததாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தமிழகம் முழுவதும் இருந்த விஜய் ரசிகர் மன்றங்கள் தற்போது விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகின்றன. அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய்யின் ஆதரவைப் பெற்று அவரது ரசிகர்களின் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் நடிகர் விஜய் இதுவரை தனது வெளிப்படையான ஆதரவை எந்த அரசியல் கட்சிக்கும் வழங்கவில்லை. சமீபத்தில் சர்கார் பட ரிலீஸின் போது அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் விஜய் ரசிகர்கள் அதிமுகவை புறக்கணிக்கும் மனநிலையில் இருப்பதாக விஜய் மக்கள் இயக்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கன்னியாகுமரியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கொட்டாரம் பகுதியில் விஜய் நற்பணி மன்றத்தினர் தங்களுக்கு உற்சாக வரவேற்பளித்ததாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் விஜய் மக்கள் இயக்க கொடியோ, பேனர்களோ அதில் இடம்பெறவில்லை.

Photos: Twitter@PonnaarrBJP


Photos: Twitter@PonnaarrBJP


Photos: Twitter@PonnaarrBJP


 நடிகர் விஜய் மற்றும் மக்கள் இயக்கத் தலைமை இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனக்கு அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை - தமிழிசைக்கு நடிகர் அஜித் பதிலடி

வசூல் நாயகன் விஜய்-யின் வெற்றி ரகசியம்!


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...