பீஸ்ட் படம் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியது வரவேற்பை பெற்று வருகிறது.
பெட்ரோல் விற்கும் ரேட்டில் இப்படியொரு இன்ப அதிர்ச்சியா என்று இலவச பெட்ரோலை வாங்கி சென்றவர்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க - Beast Review: திரையை தெறிக்க விடும் விஜய்... ரிப்பீட் மோடில் அரபிக் குத்து பாடல்!
தொடர்ந்து 5 நாட்களுக்கு சினிமா ரசிகர்கள் பீஸ்ட் படத்தை முன்பதிவு செய்து வைத்துள்ளதால், கலெக்சனும் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.
படம் இன்று ரிலீசானதையொட்டி பல்வேறு மக்கள் நல நடவடிக்கையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மேற்கொண்டனர்.
[video width="640" height="352" mp4="https://images.news18.com/tamil/uploads/2022/04/Z1CcKIC8NZKecYxG.mp4"][/video]
குறிப்பாக தாம்பரத்தில் நேஷனல் தியேட்டரில், படம் பார்த்து வெளியே வந்தவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒரு லிட்டர் பெட்ரோலை வழங்கினார்கள்.
இதையும் படிங்க - பீஸ்ட் FDFS : திருவிழா போல் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்...
சென்னையில் பெட்ரோல் ரேட் ரூ. 110-யை தாண்டியுள்ள நிலையில் விஜய் ரசிகர்களின் இந்த பரிசு, வாங்கிச் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.