அறந்தாங்கி சிறுமி குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதி அளித்து உதவியுள்ளனர்.

அறந்தாங்கி சிறுமி குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் நிதியுதவி
விஜய் ரசிகர்கள் நிதியுதவி
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மாதம் 30-ம் தேதி காணாமல் போனதாக காவல்துறையினரிடம் அவரது பெற்றோர் புகாரளித்தனர்.

வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் சிறுமியை தேடி வந்த நிலையில், ஜூலை 1-ம் தேதி கிளவிதம்மம் ஊரணியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதியில் காயங்களுடன் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அறந்தாங்கி டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான போலீஸார் விசாரணையின் அடிப்படையில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி ராஜா (27) என்பவரை கைது செய்தனர்.

பிணக்கூறாய்வில் சிறுமி பாலியல் வன்புண்ர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் ராஜா என்ற பூ கட்டும் தொழிலாளி குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் வேறு யாரெல்லாம் இந்தக் குற்ற சம்பவத்தில் தொடர்பில் இருக்கிறார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமியை இழந்து வாடும் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ரூ.50,000 நிதியுதவி அளித்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading