காவல் நிலையத்துக்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கிய விஜய் ரசிகர்கள் 

காவல் துறை அலுவலங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை விஜய் ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.

காவல் நிலையத்துக்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கிய விஜய் ரசிகர்கள் 
விஜய் ரசிகர்கள்
  • Share this:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி 42,687 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில் 23,409 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 397 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி முன்கள பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் காவல் துறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேனியில் உள்ள காவல்துறை அலுவலகத்துக்கு விஜய் ரசிகர்கள் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தேனி நகர காவல் கண்காணிப்பாளர் ராமலட்சுமி மற்றும் துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கிருமிநாசினியை கையில் தொடாமல் பயன்படுத்த ஏதுவாக இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் 46-வது பிறந்த நாள் என்பதால் அதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இதுபோன்ற உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக தனது பிறந்தநாளுக்காக எந்த ஒரு கொண்டாட்டாங்கள், நலத்திட்டங்கள் மற்றும் செய்திதாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் மூலமாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் விஜய் அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்பார்க்க : தண்ணீரில் ஆறு மாதம்... தரையில் ஆறு மாதம்: 73 ஆண்டுகளாய் தத்தளிக்கும் கிராமம்
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading