விஜயின் அதிரடி உத்தரவு... ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி ரசிகர்கள் உதவி

விஜய் ரசிகர்கள்

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ள நிலையில், புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 2,767 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க உள்நாட்டில் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, 3.23 லட்சமாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பு குறைந்து இருந்தாலும், தொடர்ந்து 6 வது நாளாக இந்தியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 2,771 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 28.82 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை, 14 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒருபுறம் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் விஜய் சொன்னதன் பேரில் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தேவைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு தேவையான முகக் கவசங்கள், கையுறைகள் விஜய் மக்கள் இயக்கத்தினரால் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: