மக்கள் பணியாற்றும் போலீசாருக்கு விருந்து படைத்த விஜய் ரசிகர்கள்...!

மக்கள் பணியாற்றும் போலீசாருக்கு விருந்து படைத்த விஜய் ரசிகர்கள்...!
  • Share this:
கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க வரும் 14-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அரசு கூறி வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தியதை அடுத்து பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதட்டி மனதார நன்றி தெரிவித்தனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பணியாற்றும் போலீசாருக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்ட காவலர்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், மாஸ்க், பிஸ்கட் பாக்கெட் வழங்கிய விஜய் ரசிகர்களுக்கு அந்த மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் நன்றி தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் காவலர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக அம்மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.மேலும்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.படிக்க: நர்ஸ் பணிக்கு ஏன் திரும்பவில்லை - ரசிகரின் கேள்விக்கு ஜூலி பதில்
 
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading