வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவி

சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதியுதவி அளித்துள்ளனர்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவி
விஜய் மக்கள் இயக்கத்தினருடன் பழனி குடும்பத்தார்
  • Share this:
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வாரம் இந்திய ராணுவம் -சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் இருபது இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.

22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வரும் பழனிக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர். பழனியின் மரணம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் இராமநாதபுரம், தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைந்து அக்குடும்பத்துக்கு ரூ.1 லட்ச ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.




மேலும் சினிமா செய்திகள் படிக்க: ஹீரோவாகிறார் நடிகர் லாரன்ஸின் தம்பி எல்வின்

நாளை விஜய்யின் 46-வது பிறந்தநாள் என்பதால் போஸ்டர் பேனர் பேப்பர் விளம்பரம் நலதிட்டங்கள் போன்றவை தவிர்க்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதனால் தேனி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளை ரத்து செய்த விஜய் மக்கள் இயக்கத்தினர் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்ததாக தெரிவித்துள்ளனர்.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading