வருகிற 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் துணிவு படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், வாரிசு படத்தை 4 ஏரியாக்களில் மட்டும் வெளியிடுகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் துணிவு படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க முடிவு செய்வதாக சர்ச்சை உருவானது. கடந்த சில நாட்களுக்கு தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு, தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அஜித் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். வாரிசு படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக சென்னை சென்று ரெட் ஜெயண்ட்டி நிறுவனத்திடம் பேசவிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே வாரிசா துணிவா என ரசிகர்கள் அடித்துக்கொண்டிருந்த நிலையில் தான் தில் ராஜு கொளுத்திப்போட்டிருந்தார். இதனால் சமூக வலைதளங்களே பற்றி எரிந்தது. தில் ராஜுவின் பேச்சுக்கு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கடும் கண்டனங்களை பதிவுசெய்திருந்தார்.
#TANGEDCO #டான்ஜெட்கோ#MINNAGAM #மின்னகம்#TNEB pic.twitter.com/g7ZeiukjUP
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) December 24, 2022
முன்னதாக, நல்ல படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை என அஜித் தெரிவித்திருந்தார். இப்படி போட்டாபோட்டி சென்றுகொண்டிருக்கும் நிலையில், பேரிடர் காலங்களில் பணிபுரிந்ததற்காக மின் வாரிய ஊழியர்களின் துணிவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டான்ஜெட்கோ போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. அந்த போஸ்டரில் துணிவு படத்தின் லோகோ இடம்பெற்றிருந்தது தான் சர்ச்சைக்கு காரணம்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் நிலையில் துணிவு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் டேன்ஜெட்கோ இந்த போஸ்டரை வெளியிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள விமர்சித்துவருகின்றனர்.
இது குறித்து பதிவிட்டு வரும் இணையவாசிகள் சிலர் திரைப்படங்களின் விளம்பர சண்டையெல்லாம் தேவையற்றது. நல்ல படம் நிச்சயம் ரசிகர்களை சென்றடையும். எனவே ரசிகர்கள் நல்ல திரைப்படத்துக்கு ஆதரவு கொடுப்பது சினிமாவுக்கு ஆரோக்கியம் என பதிவிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Thunivu, Udhayanidhi Stalin, Varisu