நடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து அவதூறாக பேசியதாக, நடிகை மீரா மிதுன் மீது பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் மனைவிக்கு எதிராக அவதூறு வீடியோ; நடிகை மீராமிதுன் மீது போலீசில் புகார்
  • Share this:
மாடலிங் உலகில் இருந்து 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலமாக மீரா மிதுன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார். பெரிய எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார். சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு பாலிவுட் திரை உலகில் உள்ள வாரிசு அரசியல் பெரும் விவாத பொருளாக மாறியது.

வாரிசு என்பதாலேயே வாய்ப்புகள் கிடைப்பதும், வாரிசு அல்லாத திறமைசாலிகளுக்கு வாய்ப்பு மறுப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டைப்போல கோலிவுட் எனப்படும் தமிழ் திரையுலகிலும் ஒரு மாஃபியா கேங் இருப்பதாகவும், அதனால் தான் தனக்கு எந்த பட வாய்ப்பு வந்தாலும் அதை அவர்கள் தடுத்து விடுகிறார்கள் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் மீரா மிதுன்.

பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட விஜய் மற்றும் சூர்யா பற்றி அவர் மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து ரசிகர்களின் எதிர் விமர்சனங்களை வாங்கிக் கட்டிக்கொண்டார். விஜய், சூர்யா தன்னை கண்டு பயப்படுவதாகவும், தானா சேர்ந்த கூட்டம் படத்திலிருந்து தான் நடித்த காட்சியையே சூர்யா பயந்து நீக்கிவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.


Also Read : எங்கள விட்டுறுங்க அண்ணா, ப்ளீஸ்.. கதறும் காதல் ஜோடி, அத்துமீறும் கும்பல் - அதிர்ச்சி வீடியோ

ட்விட்டரில் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்தபோது விஜய் மற்றும் சூர்யா இருவரும் cyberbullies கொண்டு ஒரு பெண்ணை மிரட்டுகிறார்கள் என்றார். ஒரு படி மேலே போய் விஜயின் மனைவி சங்கீதா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா குறித்து அவர் பேசிய பேச்சுதான் தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.

மீரா மிதுனின் அத்துமீறிய பேச்சுக்கு பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், விஜய் ரசிகர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading