விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி: புஸ்சி ஆனந்த் மீது புகார் - நடப்பது என்ன?

விஜய்

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தில் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக விஜய் ரசிகர் மன்றத்தில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. 

 • Share this:
  நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பில் தமிழகம் முழுவதும் மாநில, மாவட்ட, ஒன்றியம் மற்றும் கிளை வரை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற நிகழ்வுகளை நடத்திவருகின்றனர்.

  இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் என்பவர் தற்போது செயல்பட்டு வருகின்றார்.

  இந்நிலையில் தான் மக்கள் இயக்கம் ஆரம்பத்தில் இருந்து நடிகர் விஜய்காக மன்றதின் பணியாற்றி வரும் நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் மாற்றப்பட்ட நிர்வாகிகளை புஸ்சி ஆனந்த் வேண்டும் என்றே புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

  இதனால் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் என்று தனித்து இயங்க தொடங்கியுள்ளனர். ஆனால் அப்படி தனித்து செயல்படுபவர்கள் மீது புஸ்சி ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து மிரட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  விஜய் மக்கள் இயக்கத்தில் நடக்கும் இது போன்ற குளறுபடிகளை நடிகர் விஜயிடம் சொல்லவிடாமல் தடுப்பதாகவும் இனி புஸ்சி ஆனந்த பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கருப்புக்கொடி காட்டப்படும் என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
  Published by:Karthick S
  First published: