Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசு படத்தைப் பார்க்க வாங்க... அஜித் ரசிகர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைத்த விஜய் ரசிகர்!

வாரிசு படத்தைப் பார்க்க வாங்க... அஜித் ரசிகர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைத்த விஜய் ரசிகர்!

விஜய் ரசிகர் - வாரிசு

விஜய் ரசிகர் - வாரிசு

வீட்டு விசேஷங்களுக்கு உறவினர்களை அழைப்பது போல், அஜித் ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்துள்ளார் விஜய் ரசிகர் ஆதி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படம் பார்க்க வரும்படி அஜித் ரசிகர்கள் வீட்டுக்கு அழைப்பிதழுடன் சென்றிருக்கிறார் விஜய்யின் தீவிர விசிறி ஒருவர். 

இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடம் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

அதே நேரத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படமும் நாளை வெளியாகிறது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்நிலையில், பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அஜித் ரசிகர்கள் வாரிசு படத்தை காண வர வேண்டும் என அழைப்பிதழ் அச்சடித்து அவர்களின் வீடுகளுக்கு சென்று ஆந்த பத்திரிக்கையுடன் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து உறவினர்களை அழைப்பது போல் அழைப்பு விடுத்து வருவது அஜித் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் பட்டுக்கோட்டை நகர தலைவரான ஆதி ராஜாராம், வாரிசு படத்தை காண அல்டிமேட் ஸ்டார் அஜித் ரசிகர்கள் மற்றும் அனைவரும் வாரீர் என அழைப்பிதழ் அச்சடித்துள்ளார். அதை வீட்டு விசேஷங்களுக்கு உறவினர்களை அழைப்பது போல், அஜித் ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று அழைப்பு விடுத்துள்ளார். இணையத்தில் விஜய் - அஜித் ரசிகர்கள் அடித்துக் கொள்வதும், நேரில் அன்பு பாராட்டுவதும் புரியாத புதிரான ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Vijay, Varisu