தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் வாரிசுடன் நடிகர் அஜித்தின் துணிவும் தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படமும் வெளியாவதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் தோழா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வம்சி மீண்டும் தனது மேஜிக்கை நிகழ்த்துவார் என விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். வாரிசு படத்துக்கு முதன்முறையாக தமன் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் மேலும் 3 பாடல்கள் வெளியாகின்றன.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நிகழ்வு நடந்திருக்கிறது. நடிகர் விஜய் கேரவனிலிருந்து வாரிசு இசை வெளியீட்டு விழா அரங்கத்துக்கு வரும் ஃபோட்டோவை பகிர்ந்து அவர் படு ஸ்டைலாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Thalapathy Vijay, Actress Rashmika Mandanna, Varisu