ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு

விஜய் தேவரகொண்டா சமந்தாவுக்கு காயமில்லை... விபத்து செய்தியை மறுத்த குஷி படக்குழு

சமந்தா - விஜய் தேவரகொண்டா

சமந்தா - விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ள குஷி படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சமந்தா, விஜய் தேவகொண்டா நடிக்கும் குஷி படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதாக வெளிவந்த செய்தியை படக்குழு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

“இந்தச் செய்தியில் உண்மை இல்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு நேற்று ஒட்டுமொத்த படக்குழுவும் ஹைதராபாத் திரும்பினர். இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவுள்ளது. தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று படக்குழு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்துள்ள குஷி படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. காஷ்மீரில் 20 நாட்களுக்கும் மேலாக ஷெட்யூலை முடித்து தற்போது ஐதராபாத் திரும்பியுள்ளது. காஷ்மீர் ஷெட்யூலில் சாம் - விஜய் சம்பந்தப்பட்ட பல முக்கியமான காட்சிகள் இயற்கை அழகுடன் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, செவ்வாயன்று, சமந்தா ரூத் பிரபு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் விஜய் தேவரகொண்டா, வெண்ணிலா கிஷோர் மற்றும் இயக்குனர் ஷிவா நிர்வாணா ஆகியோர் கொண்ட படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு வாய்ப்பு தர என் அம்மாவை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள் - பகீர் கிளப்பிய செந்தூரப்பூவே ஸ்ரீநிதி
 
View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)சமந்தா ரூத் பிரபு மற்றும் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள காதல் திரைப்படம் குஷி. இந்தப் படத்திற்கு முன்னர் VD11 என்று பெயரிடப்பட்டது. இதனை ஷிவா நிர்வாணா இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த மாத தொடக்கத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் குஷி திரைப்படம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

First published:

Tags: Actress Samantha