ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அப்போ காதல்தானா? மாலத்தீவுக்கு ட்ரிப் அடித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா!

அப்போ காதல்தானா? மாலத்தீவுக்கு ட்ரிப் அடித்த விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா!

மும்பை விமான நிலையத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

மும்பை விமான நிலையத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

இவரும், விஜய் தேவரகொண்டாவும் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆனது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் ஜோடியாக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இருவரும் காதலித்து வருவாக பேசப்படும் நிலையில், இந்த சுற்றுலா சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான் படத்தின் அறிமுகம் ஆனார். தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா.

    புஷ்பா படத்தில் அவர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்தது நல்ல வரவேற்பை நாடு முழுவதும் பெற்றுத்தந்தது. அடுத்த பாகத்திலும் ராஷ்மிகா இடம்பெற்றுள்ளார்.

    இவரும், விஜய் தேவரகொண்டாவும் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படங்களில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அற்புதமாக ஒர்க் அவுட் ஆனது. படத்தின் வெற்றிக்கும் இவ்விருவர் இடம்பெற்ற காட்சிகள் முக்கிய காரணமாக அமைந்தன.

    மெளன ராகத்தின் ரீமேக் படமா 'ராஜாராணி'? வில்லங்க கேள்விக்கு கூலாக பதிலளித்த மோகன்!

    இதற்கிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவரகொண்டாவின் லைகர் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவர் தற்போது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. லைகர் தோல்வியால் அதே படக்குழுவினருடன் அடுத்து எடுப்பதாக இருந்த ஜனகன மன படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

    இந்நிலையில் விஜய்யும், ராஷ்மிகாவும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மும்பை விமான நிலையத்திற்கு முதலில் விஜய் தேவரகொண்டா வந்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ராஷ்மிகாவும் வர, இருவரும் மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறிப் பறந்தனர்.

    '45நாள் பேசல' ஹாஸ்பிடல் வாசலில் கதறி அழுத சீரியல் நடிகை திவ்யா!

    இருவரும் பல்வேறு முறை டேட்டிங் செய்துவந்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. இதனை மேலும் உறுதி செய்யும் வகையில் மாலத்தீவுக்கு ஜோடியாக சுற்றுலா சென்றுள்ளனர் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும்.

    Published by:Musthak
    First published:

    Tags: Actress Rashmika Mandanna, Vijay devarakonda