அடுத்த படத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் சுகுமாருடன் இணைவது குறித்த அறிவிப்பை நடிகர் தேவரகொண்டா தன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தேவரகொண்டாவும் சுகுமாரும் இணையும் முதல் கூட்டணியாகும். இந்தப் படத்தை கேதார் சிலகம்செட்டி தயாரித்து, 2022ம் ஆண்டில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் பதிவிட்டிருப்பதாவது, "சுகுமார் - விஜய் தேவரகொண்டா... என்னுள் இருக்கும் நடிகன் மிகவும் உற்சாகமடைந்துள்ளான்... என்னுள் இருக்கும் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்! ஒரு மறக்க முடியாத சினிமாவுக்கு நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம்.. சுகு சாருடன் நான் பணிபுரிய காத்திருக்கிறேன்.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேதர், நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருக்கிறீர்கள், நீங்கள் மிக கடினமாக உழைக்கிறீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
முதல் முறையாக திரைப்படம் தயாரிக்கும் கேதர் சிலகம்செட்டி இப்படம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், தனக்கு விஜய் மற்றும் சுகுமார் இருவரையும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்று கூறியுள்ள அவர் இவ்விருவரையும் ஒன்றிணைத்தற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Also read: ‘அண்ணாத்த’ ஷூட்டிங்... ஹைதராபாத் செல்ல ரஜினி திட்டம்
“இது எனக்கு ஒரு சிறப்பான நாள். இரண்டு பேரும் புதியதொரு படைப்பைக் கொடுக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவர்கள் இருவரது பாணியும் வெளிப்படும்” என்று தயாரிப்பாளர் கேதார் கூறியுள்ளார். இந்த ஆண்டு காதலர் தினத்தில் வெளிவந்த கிராந்தி மாதவ் இயக்கிய 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' என்ற ரொமான்டிக் காதல் திரைப்படமே தேவரகொண்டா கடைசியாக நடித்தது. இப்படத்தில் ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் ட்ரேசா மற்றும் இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பூரி ஜகந்நாட்டின் ஒரு தெலுகு படத்திற்கு விஜய் தயாராகி வருகிறார். நடிகை அனன்யா பாண்டே நடிக்க உள்ள இந்தப் படம் பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் இந்தியிலும் படமாக்கப்படவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு 2020 ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கியது.
மறுபுறம், சுகுமார் கடைசியாக ராம் சரணுக்கு 2018ம் ஆண்டில் ரங்கஸ்தலம் என்ற ஆக்சன் படத்தைக் கொடுத்தார். அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அதிரடி திரில்லர் படமான ’புஷ்பா’வில் பணியாற்றி வருகிறார். மேலும், அதுவும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.