ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமண கோலத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் படம்!

திருமண கோலத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் படம்!

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா

”ராஷ்மிகா ஒரு டார்லிங், நான் அவரை மிகவும் விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார் விஜய் தேவரகொண்டா.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் திருமண படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

  ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல காலமாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இது குறித்து அவர்கள் ஏற்போ, மறுப்போ தெரிவிக்கவில்லை. இதற்கிடையே ரசிகர்கள் விஜய் - ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரியை ரசித்து வருகிறார்கள்.

  இந்நிலையில் ஒரு ரசிகர் இந்த ஜோடியை புதுமணத் தம்பதிகளாக போட்டோஷாப் செய்துள்ளார். ராஷ்மிகா மணப்பெண் லுக்கில் லெஹங்கா அணிந்திருக்கிறார். ஷெர்வாணியில் மாப்பிள்ளையாக ஜொலிக்கிறார் விஜய். இணையத்தில் வைரலான இப்படம், நெட்டிசன்களிடமிருந்து நிறைய லைக்ஸை பெற்றுள்ளது. இது நனவாக வேண்டும் எனவும் விஜய் - ராஷ்மிகா ரசிகர்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள்.

  கரண் ஜோஹரின் டாக் ஷோவில் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டபோது, ​​அவரது காதல் வாழ்க்கையைப் பற்றி தொகுப்பாளர் கேட்டார். ரஷ்மிகா மந்தனாவுடனான காதல் வதந்தி குறித்துக் கேட்ட கரண் ஜோஹரிடம், “என் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் அவருடன் இரண்டு படங்கள் நடித்துள்ளேன். ராஷ்மிகா ஒரு டார்லிங், நான் அவரை மிகவும் விரும்புகிறேன். அவர் உண்மையிலேயே நல்ல தோழி. நீங்கள் திரைப்படங்கள் மூலம் நிறைய உயர்வு தாழ்வு என பல விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்கிறீர்கள். அதனால் ஒரு பிணைப்பு உருவாகிறது. பொதுவாக, ஒரு பெண்ணை கண்ணில் பார்க்க கூட எனக்கு சிறிது நேரம் ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.

  நீங்கள் யார் எனக் கேட்ட தொகுப்பாளர்... நெட்டிசன்களின் மனதை வென்ற ரன்வீர் சிங்கின் பதில்!

  ரஷ்மிகாவும் விஜய்யும் சில வருடங்களுக்கு முன்பு பிரிந்ததாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் பிரத்தியேகமாக செய்தி வெளியிட்டது. ஆனால் ‘லைகர்’ படத்தின் தோல்வி முன்னாள் காதலர்களை ஒன்றிணைத்ததாகத் தெரிகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Actress Rashmika Mandanna, Vijay devarakonda