Home /News /entertainment /

5 மொழிகளில் வெளியிடப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் அக்டி பக்டி பாடல்!

5 மொழிகளில் வெளியிடப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் அக்டி பக்டி பாடல்!

விஜய் தேவரகொண்டா, அணன்யா பாண்டே

விஜய் தேவரகொண்டா, அணன்யா பாண்டே

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் அக்டி பக்டி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள லைகர் படத்தில் இடம்பிடித்த அக்டி பக்டி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றதுடன் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

    தற்போது விஜய் தேவரகொண்டா ‘லைகர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கிவருகிறார்.

    Also read... லீனா மணிமேகலைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன்!

    லைகர் படத்தில் குத்துச் சண்டை வீரர் என்ற கேரக்டரில் விஜய் தேவரகொண்ட நடிக்கிறார். மேலும், சர்வதேச புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    இந்நிலையில் லைகர் படத்தில் இடம்பிடித்த அக்டி பக்டி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் அணன்யா பாண்டே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் அக்டி பக்டி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Lyrical Video Songs, Vijay devarakonda

    அடுத்த செய்தி