விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் விஜய்...!

Web Desk | news18
Updated: July 18, 2019, 8:21 PM IST
விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் விஜய்...!
நடிகர் விஜய் சேதுபதி
Web Desk | news18
Updated: July 18, 2019, 8:21 PM IST
விஜய் சேதுபதியை சந்திப்பதற்காக தான் காத்திருப்பதாக நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்துள்ள டியர் காமரேட் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் படக்குழு இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது. அதைத் தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற முதல் பாடலை நடிகர் விஜய் சேதுபதி இன்று மாலை வெளியிட்டார்.


இந்தப் பாடலை நடிகர் விஜய் சேதுபதி பாடியுள்ளார். மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ளார். பாடலை வெளியிட்டதற்காக விஜய் சேதுபதிக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்திருக்கும் விஜய் தேவரகொண்டா, உங்களுடைய குரல் பாடலுக்கு வலுசேர்த்துள்ளது. உங்களை சந்திக்க காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் தேவரகொண்டா, சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு பின்னர் விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராக தான் மாறிவிட்டதாகவும், அவருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...