Home /News /entertainment /

விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் நடிக்கும் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் நடிக்கும் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

லைகர்

லைகர்

மைக் டைசன், விஜய் தேவரகொண்டா சம்பந்தப்பட்ட காட்சிகளை யுஎஸ்ஸில் படமாக்கியுள்ளனர். இன்னும் ஒரேயொரு ஷெட்யூல்ட் இந்தியாவில் எடுக்கப்பட உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தெலுங்கின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவும், பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடிக்கும் லைகர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

பூரி ஜெகன்நாத் கமர்ஷியல் கிங். இவரது பிசினஸ்மேன், டெம்பர் திரைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தவை. பாகுபலி படத்தின் கதாசியர் விஜயேந்திர பிரசாத் பூரி ஜெகன்நாத்தை தனது போட்டியாளர் என்று கூறியிருக்கிறார் என்றால் அவரது கமர்ஷியல் வேல்யூ எத்தகையதாக இருக்கும் என்பதை ஒருவரால் யூகித்துக் கொள்ள முடியும். அவரது புதிய படம்தான் லைகர் (லயன் டைகர்).

இதில் விஜய் தேவரகொண்டா நாயகனாகவும், அனன்யா பாண்டே நாயகியாகவும் நடிக்கின்றனர். விஜய் தேவரகொண்டா இதில் பாக்ஸராக வருகிறார். கிளைமாக்ஸில் அவருடன் குத்துச் சண்டை ஹெவிவெயிட் முன்னாள் உலகச் சாம்பியன் மைக் டைசன் மோதுகிறார். ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கும் மைக் டைசன் இந்தியப் படம் ஒன்றில் நடிப்பது இதுவே முதல்முறை.

மைக் டைசன், விஜய் தேவரகொண்டா சம்பந்தப்பட்ட காட்சிகளை யுஎஸ்ஸில் படமாக்கியுள்ளனர். இன்னும் ஒரேயொரு ஷெட்யூல்ட் இந்தியாவில் எடுக்கப்பட உள்ளது. அது முடிந்தால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும்.

Vijay Devarakonda and Mike tyson's Liger to hit screen in August 2022, vijay deverakonda, mike tyson, liger, liger movie, liger movie download, liger movie story, liger movie hd, liger movie release date in tamil, liger movie wikipedia, liger movie release date postponed, liger movie trailer, liger movie release date in india, விஜய் தேவரகொண்டா, மைக் டைசன், லைகர், லைகர் ரிலீஸ்

லைகர் படத்தின் முதல் முன்னோட்ட டீஸரை 31-12-21 அன்று வெளியிடுகின்றனர். படம் 2022 ஆகஸ்ட் 25 வெளியாகும் என அறிவித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். சண்டைப் படங்களில் லைகர் ஒரு மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Vijay deverakonda

அடுத்த செய்தி