விஜய்யின் சைக்கிள் பயணத்தில் பல குறியீடுகள் இருக்கின்றன - பிரபல இயக்குநர் கணிப்பு

விஜய்யின் சைக்கிள் பயணத்தில் பல குறியீடுகள் இருக்கின்றன - பிரபல இயக்குநர் கணிப்பு

விஜய்

விஜய்யின் சைக்கிள் பயணத்தில் பல குறியீடுகள் இருப்பதாக இயக்குநர் திரு தெரிவித்துள்ளார்.

  • Share this:
மிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 11 மணி நேர நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவாகியுள்ளது

அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்று காலை முதலே தங்களது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். தனது வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதாலும் அவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அதேநேரம் பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக பேசப்படுகிறது. அவர் சைக்கிளில் வந்த போது போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் இருபுறமும் தலைவா என்ற கோஷத்தோடு இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் பேரணியாக வந்தனர்.

வாக்களித்து முடித்த பின் மீண்டும் தனது சைக்கிளில் வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்த விஜய் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் ஸ்கூட்டரில் அங்கிருந்து திரும்பினார். திரைத்துறையின் உச்ச நட்சத்திரமான விஜய் சைக்கிளில் வந்து வாக்குச் செலுத்தியிருப்பது அனைவரிடமும் கவனம் பெற்று வருகிறது.



விஜய்யின் சைக்கிளில் சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் திரு, அதில் பல குறியீடுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதுஒருபுறமிருக்க நடிகர் அஜித் அணிந்து வந்த முகக்கவசத்திலும் கருப்பு, சிவப்பு நிறங்கள் இடம்பெற்றிருப்பதும் ஒரு குறியீடு தான் என்ற பேச்சும் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது.
Published by:Sheik Hanifah
First published: