விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?

விஜய்

விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிளின் விலை முதல் சிறப்பம்சங்கள் வரை அனைத்து தகவல்களையும் அவரது ரசிகர்கள் இணையத்தில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Share this:
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் நடிகர் விஜய். வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி இருப்பதாலும் காரில் அப்பகுதிக்குச் செல்வது சிரமம் என்பதாலும் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாகவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் அவரது மக்கள் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விஜய் வாக்குச் சாவடிக்கு ஓட்டிச் சென்றார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அந்த சைக்கிளின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள். விஜய் ஓட்டிச் சென்ற சைக்கிள் குறித்த விலை மற்றும் சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்.

பெர்ஃபார்மென்ஸ் வகை சைக்கிள் மாடல்களை தயாரிக்கும் மான்ட்ரா நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்புகளில் இந்த மெட்டல் மாடலும் ஒன்று.

எடை : 16 கிலோ

விலை: ரூ.22,500

நிறம்: கார்பன் பிளாக் மற்றும் நியான் ரெட் என இரட்டை வண்ணக் கலவை மேட் ஃபினிஷில் கொடுக்கப்பட்டுள்ளது.

கியர் அமைப்பு: 24 ஸ்பீடு கியர்.

பிரேக் : மெக்கானிக்கல் டிஸ்க் பிரேக்குகள்

டயர்கள்: 29 * 2.1 அங்குல அளவுடைய எம்டிபி டயர்கள்.

ஹேண்டில்பார் : எக்ஸ்எம்ஆர் அலாய் ஹேண்டில்பார்.

மவுன்டெயின் பைக் என்ற ரகத்தில் குறிப்பிடப்படும் மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிள் மாடலையே பயன்படுத்தியுள்ளார் விஜய். 2019-ம் ஆண்டு மான்ட்ரா நிறுவனம் வெளியிட்ட மெட்டல் மாடல் ஆகும்.
Published by:Sheik Hanifah
First published: