விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்? பிஆர்ஓ விளக்கம்

விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது ஏன்? பிஆர்ஓ விளக்கம்

விஜய்

சைக்கிளில் வாக்களிக்க வந்தது ஏன் என்று விஜய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 11 மணி நேர நிலவரப்படி 26.29 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களிக்க தனது வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டார். அவர் சைக்கிளில் வந்த போது போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தாலும் இருபுறமும் தலைவா என்ற கோஷத்தோடு இரு சக்கர வாகனங்களில் அவரது ரசிகர்கள் சிலர் பேரணியாக வந்தனர்.

விஜய்யின் இந்த சைக்கிள் பயணம் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைவரிடமும் பேசுபொருளானது. மறைமுகமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும், அவரது சைக்கிள் நிறம் சில குறியீடுகளை கொண்டிருப்பதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து விஜய்யின் மக்கள் தொடர்பாளர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி இருப்பதாலும் காரில் அப்பகுதிக்குச் செல்வது சிரமம் என்பதாலும் நடிகர் விஜய் சைக்கிளில் சென்றதாகவும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததை சிலர் அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள் என்று ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
Published by:Sheik Hanifah
First published: