விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிய ரசிகர்கள்

விஜய் - அட்லீ காம்போவில் வெளியான படங்களை வைத்து உருவாக்கிய மேஷ் அப் வீடியோ ஒன்றை நாளை மாலை நடிகர் பிரேம்ஜி வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிய ரசிகர்கள்
விஜய்
  • Share this:
ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வர இருக்கும் நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் அடுத்த மாதம் ஜூன் 22-ம் தேதி தனது 46-வது நாளைக் கொண்டாட இருக்கிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் உள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஜூன் 22-ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகுமா அல்லது ட்ரெய்லர் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இதனிடையே படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் அர்ஜூன் தாஸ், இதுவரை 6 தடவைக்கும் மேல் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டேன். எப்போது வெளியானாலும் மாஸாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் ரிலீஸ் குறித்த தகவல்களை இதுவரை படக்குழு வெளியிடவில்லை.


இந்நிலையில் #1MonthForVijayBdayBash, #Thalapathy உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே விஜய் - அட்லீ காம்போவில் வெளியான படங்களை வைத்து உருவாக்கிய மேஷ் அப் வீடியோ ஒன்றை நாளை மாலை நடிகர் பிரேம்ஜி வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் கொண்டாட்டம் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டாலும், ஜூன் 22-ம் தேதி மாஸ்டர் திரைக்கு வருமா அல்லது ட்ரெய்லர் உள்ளிட்ட படக்குழுவின் அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்பது வரக்கூடிய நாட்களில் தெரிய வரும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading