விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்

விஜய் பிறந்தநாளில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் அஜித் பெயரை இடம்பெற வைத்துள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள்.

விஜய் பிறந்தநாளில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த அஜித்
விஜய் | அஜித்
  • Share this:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் நிலையில், திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பேனர் போஸ்டர் பேப்பர் விளம்பரங்கள் வேண்டாம் என்று விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமூகவலைதளங்களில் கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். அதற்காக நேற்று இரவு முதலே #HappyBirthdayThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கினர் ரசிகர்கள். இந்த ஹேஷ்டேக் அதிகம் பேரால் ட்வீட் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்தது.
இதைப்பார்த்த அஜித் ரசிகர்களும் களத்தில் இறங்கினர். #NonpareilThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய அவர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட் செய்து முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் இந்த ட்விட்டர் ஹேஷ்டேக் சண்டையை தாங்கள் விரும்பவில்லை என்று அஜித்தும், விஜய்யும் ஏற்கெனவே தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 'மாண்புமிகு மாணவன்' முதல் 'மாஸ்டர்' வரை..! நடிகர் விஜயின் திரைப்பயணம் #HBDTHALAPATHYVijay

மேலும் படிக்க: வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவிஒருபுறம் ஹேஷ்டேக்கில் முந்த ரசிகர்கள் முயற்சித்து வந்தாலும், இன்று பிறந்தநாள் காணும் விஜய்க்கு அஜித் ரசிகர்களும் வாழ்த்துச் சொல்லியிருப்பதையும் ட்விட்டரில் நம்மால் காண முடிகிறது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading