பிகில் பட பிசினஸ்... வெளியானது முக்கிய அப்டேட்!

news18
Updated: June 24, 2019, 8:06 PM IST
பிகில் பட பிசினஸ்... வெளியானது முக்கிய அப்டேட்!
பிகில் படத்தின் போஸ்டர்
news18
Updated: June 24, 2019, 8:06 PM IST
விஜய்யின் பிகில் பட வியாபாரம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் மூன்று போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இந்தப் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபாவளிக்கு படம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை மிக அதிக தொகைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் எக்ஸ் ஜென் ஸ்டுடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை ரசிகர்கள் பலரும் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து பிகில் படத்தின் மூலம் விஜய் - அட்லீ கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படம் அதிக விலைக்கு வியாபாரமாகும் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ பார்க்க: வாரிசு... அரசியல்... விஜய்... முதல் படத்திலேயே அரசியல் பேசிய விஜய்!

Loading...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...