மாற்றுத்திறனாளி சிறுவனைக் குணப்படுத்த விஜய் வசனங்கள்! மருத்துவரின் புது முயற்சி

மாற்றுத்திறனாளி சிறுவனைக் குணப்படுத்த விஜய் வசனங்கள்! மருத்துவரின் புது முயற்சி
விஜய்
  • News18
  • Last Updated: November 5, 2019, 10:17 PM IST
  • Share this:
மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவனுக்கு நடிகர் விஜய்யின் வசனங்களைக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வாய் பேசமுடியாத, நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான செபாஸ்டியன் என்ற சிறுவனை குணப்படுத்த பல்வேறு மருத்துவர்களை தேடிச் சென்றுள்ளனர் அவரது பெற்றோர்கள்.

அதன்படி பல மருத்துவர்கள் சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் சிறுவனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது அங்கு ஒலித்த செல்ஃபி புள்ள ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் சிறு அசைவுகள் ஏற்படுவதை மருத்துவர்கள் பார்த்து அசந்து போயினர். அதனைத் தொடர்ந்து விஜய்யின் பஞ்ச் வசனங்கள், பாடல் காட்சிகளைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து மெதுவாக நடக்க ஆரம்பித்துள்ளார் செபாஸ்டியன். இதனால் அவரது பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வீடியோ பார்க்க: சாப்பாடு போட மறுத்த மனைவிகள்... சாப்பாட்டுக்காக சிறை சென்ற கணவர்
First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்