விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்னும் 2 வாரத்தில் வெளியாக இருப்பதால் இந்த இடைவெளியை பயன்படுத்தி இந்த வாரம் தமிழில் மூன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன.
கடந்த வாரம் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாகி இந்திய பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் இன்னும் இரண்டு வாரத்தில் பீஸ்ட், கேஜிஎஃப் 2 என இரண்டு பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இந்த வாரம் தமிழில் மூன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் மன்மதலீலை திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்துள்ளது.
தமிழில் அண்மைக்காலமாக அடல்ட் ஒன்லி படங்கள் அதிகரித்து வரும் நிலையில் அந்த வரிசையில் மன்மதலீலை படமும் இணைந்துள்ளது. மாநாடு படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை கூடுதலாக அதிகரித்துள்ளது.
மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் ஸ்வீட் கனவு - விக்ரம் பெருமிதம்!
ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் கூட்டணி இணைந்து நடித்திருக்கும் செல்ஃபி திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பான தற்கொலைகள் மற்றும் கல்வித்துறை சார்ந்த பிரச்னைகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தை வெற்றிமாறனிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மதிமாறன் இயக்கியுள்ளார்.
சன் டிவி நிகழ்ச்சியில் விஜய்... தொகுப்பாளர் யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
இந்த படங்கள் போக சிவா, நிக்கி கல்ராணி நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள இடியட் திரைப்படமும் இந்த வாரம் திரையை எட்டியுள்ளது. ஹாரர் காமெடி படங்களுக்கு பெயர் போன ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரெட்டின் கிங்ஸ்லி, மயில்சாமி, ஆனந்த்ராஜ், ஊர்வசி என நகைச்சுவை நடிகர்களின் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.