Beast: சிம்புவின் கைவிடப்பட்ட படத்தோடு தொடர்புடையதா விஜய்யின் ‘பீஸ்ட்’?

விஜய் - சிம்பு

நெல்சன் முன்பே இயக்குநராக அறிமுகமாகியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் சிலம்பராசனுடனான அவரது முதல் படம் பாதி வேலைகளை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டது.

  • Share this:
    விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம், நின்றுப்போன சிம்புவின் ‘வேட்டை மன்னனின்’ திருத்தப்பட்ட கதையா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.

    தனது இரண்டாவது படமான 'டாக்டர்' இன்னும் ரிலீஸாகாத நிலையில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். அதோடு வளர்ந்து வரும் ஒரு இயக்குனருடன் விஜய் இணைவது இது முதல் முறை அல்ல. அவரின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு திங்கட்கிழமை 'பீஸ்ட்' படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது.

    இந்நிலையில் தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' மற்றும் சிம்பு - நெல்சனின் நின்று போன படத்திற்கும் தொடர்பு இருப்பதாக சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நெல்சன் முன்பே இயக்குநராக அறிமுகமாகியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் சிலம்பராசனுடனான அவரது முதல் படம் பாதி வேலைகளை முடித்த பின்னர் நிறுத்தப்பட்டது. 'வேட்டை மன்னன்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அதில் சிம்பு ஒரு துப்பாக்கியால் சுடுவது போல் இருந்தது.

    இப்போது, 'பீஸ்ட்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஒரு துப்பாக்கியுடன் காணப்படுகிறார். அதனால் 'வேட்டை மன்னன்' மற்றும் 'பீஸ்ட்' ஆகியவை ஒரே மாதிரியான கதையோட்டங்களைக் கொண்ட படங்கள் என்ற யூகத்தை இது எழுப்புகிறது. இருப்பினும், இரு படங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று ரசிகர்கள் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: