Home /News /entertainment /

Jolly O Gymkhana Beast Song : பீஸ்ட் படத்திலிருந்து விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது..

Jolly O Gymkhana Beast Song : பீஸ்ட் படத்திலிருந்து விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியானது..

Youtube Video

Jolly O Gymkhana Beast Song : பீஸ்ட் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகிவுள்ளது.

    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தின் இயக்குநரான நெல்சன் இதற்கு முன்பு இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. எனவே பீஸ்ட் படத்தின் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளது.

    அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படக்குழு தீவிரமாக வேலை செய்துள்ளது என்பதின் எடுத்துக்காட்டு தான் ‘ ஹலமித்தி ஹபிபோ’ பாடல். இந்த பாடலை படக்குழு காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட்டது.

    ‘ஹலமித்தி ஹிபிபோ’ பாடல் யூடியூபில் 195 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது. முதல் சிங்கிள் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பி வரும் நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது. அந்த அறிவிப்பை ஒரு குட்டி ப்ரோமோவுடன் வெளியிட்டது. அந்த ப்ரோமோவில் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டேவும் உள்ளார்கள்.


    மேலும் இன்று பாடல் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனான சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.


    அதுமட்டுமில்லாமல் பீஸ்ட் படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் ‘ இன்று ஜாலியோ ஜிம்கானா நாள்’ என்று உற்சாகத்துடன் ட்வீட்டும் செய்துள்ளார்.



    இந்நிலையில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விஜய் குரலில் ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியாகிவுள்ளது.



    இதை கேட்ட விஜய் ரசிகர்கள் ஜாலியாக ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலை முனுமுனுத்து வருகின்றனர். மேலும் பீஸ்ட் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Actor Vijay, Beast

    அடுத்த செய்தி