நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 800 முதல் 850 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் துவங்கிய முன்பதிவிற்கு முதல் மூன்று நாட்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பெரும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாள் இருக்கைகள் நிரம்பி உள்ள நிலையில் வெளிநாடுகளிலும் பீஸ்ட் திரைப்படத்தின் முன்பதிவு டிக்கெட் சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக முன்பதிவு செய்யப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. மேலும் இதற்கு முன்னர் வெளியான தமிழ் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக ரசிகர்கள் பார்த்த எண்ணிக்கையை காட்டிலும் வெளிநாடுகளில் பீஸ்ட் திரைப்படத்தின் டிக்கெட் விற்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் உள்ள திரையரங்குகளில் இதுவரை முதல் நாளில் அதிக டிக்கெட்டுகளை பெற்றுள்ள திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக கோயம்பேடு ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகள் அறிவித்துள்ளன.
இதன்மூலம் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வர்த்தகம் புதிய சாதனைகளைப் படைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி கேஜிஎப் திரைப்படம் வெளியாவதால் பீஸ்ட் திரைப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பல திரையரங்குகளை மீண்டும் இந்தத் திரைப்படமே தக்கவைக்கும் நிலையில் உள்ளதால் என்ன நடைபெற போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.