பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சிக்கப்பட்டு, ட்ரால் செய்யப்படுகிறது. இதற்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றியை பெற்றது.
ஆனால் விமர்சன ரீதியில் எதிர்மறையான கமென்டுகள் பீஸ்டிற்கு அதிகம் கிடைத்தன. விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி., பீஸ்ட் இயக்குனர் நெல்சன் குறித்து தெரிவித்த கருத்துகள் வைரலாகின.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை சிறப்பாக எடுத்த நெல்சன் பீஸ்ட் படத்தை வேற லெவலில் எடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதையும் படிங்க - நடிகர் தனுஷின் ‘Wunderbar’ பிலிம்ஸ் யூடியூப் சேனல் முடக்கம்… மீட்டெடுக்க நடவடிக்கை
ஆனால், பீஸ்ட்டை விஜய் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நெல்சன் எடுத்துள்ளதாக விஜய் ரசிகர்களை விமர்சித்தார்கள்.
தியேட்டர் ரிலீஸை முடித்துக் கொண்ட பீஸ்ட் திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ் ஓடிடி தளங்களில் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க - வசூலில் அமீர் கானின் தங்கல் சாதனையை முறியடித்தது கே.ஜி.எஃப். 2... பாகுபலி 2 வசூலை முந்துமா?
இந்நிலையில் பீஸ்டின் கிளைமேக்ஸ் காட்சி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய விமானப்படையை சேர்ந்த முன்னாள் இந்நாள் அதிகாரிகள், பாதுகாப்பு துறை வல்லுனர்கள் பீஸ்ட் ரஃபேல் விமான காட்சியை பதிவிட்டு விமர்சித்துள்ளார்கள்.
ரஃபேல் விமானத்தில் ஹெல்மெட், ஆக்ஸிஜன் இல்லாமல் பறக்க முடியுமா, அதிவேகத்தில் செல்லும்போது சல்யூட் அடிக்க முடியுமா? என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர்கள் எழுப்பியுள்ளனர். தற்போது இந்த பதிவு காப்பி ரைட்டின் கீழ் நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக பாலிவுட்டில் இடம்பெற்ற லாஜிக் மீறல் காட்சிகளை விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களை திருப்திபடுத்தாத நிலையில், தற்போது அவர்களது பார்வை தளபதி 66 பக்கம் திரும்பியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.