முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய யாஷிகா - வைரலாகும் வீடியோ

'அரபிக்குத்து' பாடலுக்கு நடனமாடிய யாஷிகா - வைரலாகும் வீடியோ

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

Arabic Kuthu Halamithi Habibo : நடிகை யாஷிகா ஆனந்த் அரபிக்குத்து பாடலுக்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் தான் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் 100வது நாள் ஷூட்டிங்கை கொண்டாடும் வகையில் படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டது. அந்த போஸ்டர் மிகவும் ட்ரெண்டானது. அதில் விஜய் வித்தியாசமான லுக்கில் இருந்தார் நடிகர் விஜய்.

இதையடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு மாலை 6 மணிக்கு பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து வெளியாகும் என அறிவித்திருந்தனர் படக்குழுவினர். அந்த அறிவிப்பின் ப்ரோமோவில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருந்தனர். இவர்கள் மூவரும் விஜய்யிடம் தொலைப்பேசியின் பேசினார்கள். இதைக்கேட்டு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமானர்கள். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முதல் சிங்களான ஹலமித்தி ஹபிபோ என்ற அரபிக் குத்து பாடலை காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. இந்த பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

அரபிக்குத்து பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் ’அரபிக்குத்து’ பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
 
View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)நடிகை சமந்தா பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ..
 
View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)இந்நிலையில் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்தும் தனது இன்ஸ்டாகிராமில் ‘ஹலமித்தி ஹபிபோ’ பாடலுக்கு நடனமாடி பதிவிட்டுள்ளார்.


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Viral Video, Yashika Anand