Home /News /entertainment /

வழிகாட்டி போல நடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் - நடிகர் விஜய் பாபு மீது நடிகை குற்றச்சாட்டு

வழிகாட்டி போல நடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் - நடிகர் விஜய் பாபு மீது நடிகை குற்றச்சாட்டு

விஜய் பாபு

விஜய் பாபு

எனது தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான பிரச்சனைகளில் அவர் என் மீட்பராக நடந்து கொண்டார், ஆனால் போர்வைக்குள் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார்.

    நடிகர் விஜய் பாபு தன்னை ஒரு மாதத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள திரையுலகின் பெண் நடிகை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட விஜய் பாபு, மார்ச் 13 முதல் ஏப்ரல் 14, 2022 வரை தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும், பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆனால், விஜய் பாபு தனது ஃபேஸ்புக் லைவ் பதிவில், இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார், மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தன் மீது குற்றம் சாட்டிய பெண் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும், "அவரை அவ்வளவு எளிதில் விடமாட்டேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பெண்கள் என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் குழுவில் நடிகையும் பாதிக்கப்பட்டவருமான அந்த பெண் தான் சந்தித்த பாலியல் வன்கொடுமையின் விவரங்களை விரிவாகக் கூறியுள்ளார். விஜய் பாபுவை சில ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவருடன் ஒரு திரைப்படத்தில் ஒன்றாகப் பணியாற்றியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஒயின் ஷாப்பில் பாட்டில் பாட்டிலாக மதுபானம் வாங்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகை!

    சரியான வழிகாட்டுதலின்றி திரைப்படத்துறையில் புதுமுகமாக தான் அவதிப்பட்டப்போது, அந்த நேரம் முழுவதும் விஜய் பாபு தன்னிடம் நட்பாக பழகி, தனக்கு அறிவுரை கூறி தன் நம்பிக்கையை பெற்றதாகவும் கூறியுள்ளார். ”எனது தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான பிரச்சனைகளில் அவர் என் மீட்பராக நடந்து கொண்டார், ஆனால் போர்வைக்குள் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார்" என்று பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.



    அஜித் ஷாலினி திருமண அழைப்பிதழை பார்த்திருக்கிறீர்களா? - படம் உள்ளே!

    குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் பாபுவுக்கு ஸ்மிதா என்ற மனைவியும், பரத் என்ற மகனும் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    அடுத்த செய்தி