விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் சண்டைக்காட்சியில் பங்கேற்றபோது விபத்தில் சிக்கினார். இதில் முகத்தின் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் இருக்கும் விஜய் ஆண்டனி, 90 சதவிகிதம் குணமாகிவிட்டதாக அறிவித்திருந்தார். பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்குவதோடு படத்தொகுப்பு வேலைகளையும் அவரே மேற்கொள்கிறார்.
பிச்சைக்காரன் 2 படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் 4 நிமிட காட்சிகள் டிரெய்லராக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. பிச்சைக்காரன் முதல் பாகம் தமிழை விட தெலுங்கு பதிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகிறது.
பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக காவ்யா தபர் நடிக்க, ராதா ரவி, ஒய்ஜிமகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரிஷ் பேரடி, ஜான் விஜய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் சார்பாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.
The Force behind my strength,the consolations to my tears,the reason for my stress(Naughtiness super loaded)my Thangakatti-chellakutty. Meera Vijay Antony ,Congrats Baby
🤗❤️🥰🔥🔥🔥 pic.twitter.com/yfTTdIiAjL
— Fatima Vijay Antony (@mrsvijayantony) March 12, 2023
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமா தனது மகளின் படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், என் சக்திக்கு பின்னால் இருக்கும் விசை, என் கண்ணீருக்கு ஆறுதல், என்னுடைய தங்கக்குட்டி, செல்லக்குட்டி மீரா விஜய் ஆண்டனி, வாழ்த்துகள் பேபி என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay Antony