விஜய் - அட்லீ - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் அடுத்த படம் அறிவிப்பு

#Thalapathy63 | சர்கார் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் அட்லி இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் - அட்லீ - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் அடுத்த படம் அறிவிப்பு
விஜய் 63 பட பூஜை
  • News18
  • Last Updated: November 15, 2018, 3:44 PM IST
  • Share this:
சர்கார் படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் அட்லி இணைந்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய் சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்னதாகவே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. இதற்காக நீதிமன்றம் சென்ற சர்கார் படக்குழு செங்கோல் கதையாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டது. இதனால் திட்டமிட்டபடி சர்கார் தீபாவளிக்கு வெளியானது. மேலும் படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

அதே நேரத்தில் விஜய் அடுத்து எந்த இயக்குநருடன் கரம் கோர்ப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.


அதற்கு விடைசொல்லும் விதமாக இயக்குநர் அட்லீக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய். இவர்கள் இருவரும் 3-வது முறையாக இணைந்து பணியாற்ற இருக்கும் படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதை ஏஜிஎஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, மெர்சல் பட ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

கோலிவுட்டில் என்ன நடக்கிறது? தெரிஞ்சுக்க கிளிக் செய்க

News18 Tamil Appசெய்திகளை நியூஸ்18 தமிழ் ஆப் வழியாக உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்
First published: November 14, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading