ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட விஜய்!

படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை போட்ட விஜய்!
விஜய்
  • News18
  • Last Updated: March 7, 2019, 8:16 AM IST
  • Share this:
தனது காரை பின் தொடர்ந்து வந்து ரசிகர்களை பத்திரமாக திரும்பி போக சொல்லி விஜய் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெறி, மெர்சல் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் - அட்லி கூட்டணி அமைந்துள்ளது.

விஜய்யின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ‘தளபதி 63 ’ என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

vijay, விஜய்
விஜய்


விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது பிரசாத் லேப், தனியார் கல்லூரி என சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் வரும் போது ரசிகர்களால் எடுக்கப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Actor Vijay | நடிகர் விஜய்
விஜய்


இந்நிலையில் தனது காரை பின் தொடர்ந்து பைக்கில் வேகமாக வந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு பின்பு பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று ரசிகர்களிடம் விஜய் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.



விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்ப்படுகிறது.

Also watch

First published: March 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்