முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / விஜய் ஆன்டனி, சத்யராஜ் நடிக்கும் வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…

விஜய் ஆன்டனி, சத்யராஜ் நடிக்கும் வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…

வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Vallimayil Movie : தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விஜய் ஆண்டனி, சத்ய ராஜ் நடிக்கும் வள்ளி மயில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

சுசீந்திரன் இயக்கும் இந்த படத்தில் பாரதி ராஜா, பரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் காட்சியில் விஜய் ஆன்டனி, சத்யராஜ், பரியா அப்துல்லா ஆகியோரின் ஃபோட்டோ இடம்பெற்றுள்ளது.

1980களில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் வள்ளி மயில் படம் உருவாக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கேற்ப படத்தின் செட்கள் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது.

புஷ்பா படத்தில் செஞ் சந்தனக் கட்டை தாதாவாக நடித்து மிரட்டிய சுனில், தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, அறந்தாங்கி நிஷா, சிங்கம்புலி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

இதையும் படிங்க - தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமான படப் பெயர்கள் - சுவாரஸ்யமான லிஸ்ட்

விஜய் ஆன்டனி நடிக்கும் பெரும்பாலான படத்திற்கு அவரே இசையமைத்து விடுவார். ஆனால் இந்த படத்தில் சிறு மாற்றமாக இமான் வள்ளி மயில் படத்திற்கு இசையமைக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இமான் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விஜய் ஆன்டனி, சத்யராஜ், பரியா அப்துல்லா நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், தாய் சரவணன் நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், ‘வள்ளி மயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க - அழகில் ஹீரோயின்களை மிஞ்சும் பாடகி ஜொனிதா காந்தி

திண்டுக்கல்லில் வள்ளி மயில் படத்துடைய முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக கொடைக்கானல், பழனி, தேனி, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Actor sathyaraj, Vijay Antony