Home /News /entertainment /

ஸ்பெயின் செல்லும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படக்குழு

ஸ்பெயின் செல்லும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படக்குழு

சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி

சி.எஸ்.அமுதன், விஜய் ஆண்டனி

ரத்தம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக கொல்கத்தா மற்றும் ஸ்பெயின் செல்ல இருக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.

  • Last Updated :
அரை டஜன் படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் அதில் ஒன்று ரத்தம். தமிழ் படம், தமிழ் படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சி எஸ் அமுதன் ரத்தம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த தகவலை சிஎஸ் அமுதன் பகிர்ந்துள்ளார்.

ரத்தம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக கொல்கத்தா மற்றும் ஸ்பெயின் செல்ல இருக்கிறார்கள். படத்தின் முக்கியமான காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன. ரத்தம் திரில்லர் திரைப்படமாக தயாராகிறது. மூன்று நாயகிகள் இதில் நடிக்கின்றனர். ரம்யா நம்பீசன், ஸ்வேதா, மஹிமா நம்பியார். stand-up காமெடியன் ஜெகன் கிருஷ்ணா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அதிஷாவும், கார்க்கி பவாவும் இணைந்து எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை கோபி அமர்நாத் செய்கிறார். இசை கண்ணன். கமல் போக்ரா, பிரதீப், லலிதா தனஞ்செயன், பங்கஜ் போக்ரா, விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர்.

Also read... நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை மூன்று வாரங்களுக்கு அறிவிகக்க்கூடாது - உயர் நீதிமன்றம்

தமிழ் படம், தமிழ் படம் 2 இரண்டும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. முதல்முறையாக அதிலிருந்து மாறுபட்டு திரில்லர் படமாக ரத்தத்தை சிஎஸ் அமுதன் எடுத்து வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Vijay Antony

அடுத்த செய்தி