• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் ஆண்டனி இயக்குனராகும் பிச்சைக்காரன் 2...!

விஜய் ஆண்டனி இயக்குனராகும் பிச்சைக்காரன் 2...!

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

நடிப்புடன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, எடிட்டிங், இசை, இயக்கம் என பல விஷயங்களை விஜய் ஆண்டனி கையாள்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2016 இன் சூப்பர்ஹிட் திரைப்படமான பிச்சைக்காரனின் இரண்டாம் பாகம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

விஜய் ஆண்டனியின் முதல் சில படங்கள் வித்தியாசமான கதைக்காகவும், கச்சிதமான திரைக்கதைக்காகவும் ஓடின. அதன் பிறகு வெளிவந்த படங்கள் ஓடவில்லை. அடுத்தடுத்து தோல்வியடைந்தன. இறுதியில் 2016 இல் பிச்சைக்காரன் வெளியானது. சசி இயக்கியிருந்த அப்படம் விஜய் ஆண்டனியின் திரைவாழ்க்கையில் மட்டுமில்லை, சசிக்கே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தெலுங்கில் படத்தை மொழிமாற்றம் செய்து வெளியிட, அங்கு தமிழைவிட அதிகம் வசூலித்தது. இந்த வருட ஆரம்பத்தில், பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்டை எழுதி முடித்ததாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். படத்தை ப்hpயா கிருஷ்ணமூர்த்தி இயக்குவதாகவும் சொல்லப்பட்டது. பிறகு விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவனை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குவார் என சொல்லப்பட்டது. இப்போது விஜய் ஆண்டனியே படத்தை இயக்குகிறார்.



Also read... பிரமாண்ட அரங்கத்தில் பீஸ்ட் நான்காம்கட்ட படப்பிடிப்பு!

நேற்று பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நடிப்புடன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, எடிட்டிங், இசை, இயக்கம் என பல விஷயங்களை விஜய் ஆண்டனி கையாள்கிறார். முதல் பாகத்தின் வெற்றியில் பாதியை இரண்டாம் பாகம் தொட்டாலே, அது சாதனைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: